இறுதி கட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் மீது தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி கொன்றனர் – ஐ.நா அறிக்கை

47

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது இலங்கை அரசு போர் விதிமுறைகளை மீறி அப்பாவி மக்களை கொன்று குவித்தது.

இது தொடர்பான விசாரணை நடத்த ஐ.நா.சபை இந்தோனேசிய அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஷ் மென் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. அவர்கள் முழுமையாக விசாரணை நடத்தி 214 பக்க அறிக்கையை ஐ.நா. சபையிடம் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படா மல் இருந்தது. ஆனாலும் அறிக்கையில் உள்ள சில தகவல்கள் ரகசியமாக வெளி வந்தன.   இப்போது ஐ.நா.சபை இந்த அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இறுதிக்கட்ட போர் நடந்த நேரத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் ஒரே இடத்தில் முடக்கப்பட்டனர். அவர்கள் மனித கேடயமாகவும் பயன்படுத்தப்பட்டனர்.  மனித உரிமைகளை மீறி இரு தரப்பினருமே போர் குற்றங்களை செய்தனர். பொதுமக்கள் தங்கி இருந்த இடங்களில் ராணுவம் குண்டுகளை வீசியது. ஆஸ்பத்திரி மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் குண்டுவீசி தாக்கினார்கள். இதன் மூலம் 40 ஆயிரத் துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

போரில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட குண்டுகளையும் இலங்கை ராணுவத்தினர் வீசினார்கள்.  போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்வதும் இலங்கை அரசால் தடுக்கப்பட்டது. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன. போர் பகுதிக்குள் ஊடக அடக்குமுறை கையாளப்பட்டது. தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.  அங்கு நடந்த படுகொலைகள் போர் குற்றமாகும். எனவே இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறும்போது, இலங்கையில் நடந்த போர் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு இதுவரை உத்தர விடவில்லை. ஆனால் ஐ.நா. சபை விசாரணை நடத்தி இலங்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.

முந்தைய செய்திஐ.நா. நிபுணர் குழுவின் 214 பக்கங்கள் அடங்கிய அறிக்கை – அதிகாரபூர்வ வெளியீடு
அடுத்த செய்திஐ.நா வின் அறிக்கைக்கு எதிராக கையெழுத்திடுமாறு தமிழர்களை மிரட்டும் சிங்கள காவல்துறையினர்.