அறிவிப்பு: சூலை 30, மணிப்பூரில் தொடரும் பழங்குடி மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

415

க.எண்: 2023070332

நாள்: 25.07.2023

அறிவிப்பு:

பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் குக்கி பழங்குடிப் பெண்கள் இருவர் பெரும்பான்மை மெய்தெய் இனத்தைச் சேர்ந்தவர்களால் ஆடையின்றி சாலையில் அடித்து, இழுத்துச்செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், ஆட்சியாளர்களின் துணையோடு மூன்று மாதங்களாகத் தொடரும் குக்கி பழங்குடி மக்களுக்கு எதிரான கட்டுக்கடங்காத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும், அதனைத் தடுக்கத் தவறிய இந்திய ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 30-07-2023 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் 02 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

மணிப்பூரில் தொடரும் பழங்குடி மக்களுக்கு எதிரான
வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
30-07-2023 ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 02 மணிக்கு

இடம்:
வள்ளுவர் கோட்டம்
சென்னை

இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஉத்திரமேரூர் | கட்சி அலுவலகம் திறப்பு விழா – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார்
அடுத்த செய்திவிளைந்த நெற்பயிர்களை அழித்து, சுரங்கப்பணிகளைத் தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்