குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை ஜெகன்நாதர் கோயிலின் கருவறைக்குள் அனுமதிக்க மறுப்பதா? நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சனாதனத்தின் ஆட்சியா? – சீமான் கண்டனம்

99

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை ஜெகன்நாதர் கோயிலின் கருவறைக்குள் அனுமதிக்க மறுப்பதா? நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சனாதனத்தின் ஆட்சியா? – சீமான் கண்டனம்

தில்லியிலுள்ள ஜெகன்நாதர் கோயிலின் கருவறைக்குள் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அவர்களை அனுமதிக்காத கொடுஞ்செயல் அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவைக் கருவறைக்குள் வழிபட அனுமதித்துவிட்டு, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை வெளியே நிறுத்தி அவமதித்திருப்பதென்பது கடும் கண்டனத்திற்குரியது. நாட்டின் முதல் குடிமகளையே தீண்டாமைக்கோட்பாட்டுக்கு ஆளாக்கி, விலக்கி வைப்பது ஒட்டுமொத்த நாட்டுக்குமான பேரவமானமாகும். இது ஒவ்வொரு குடிமகனும் வெட்கித் தலைகுனிய வேண்டிய இழிநிலையாகும்.

மக்களாட்சியின் தலைவரான குடியரசுத்தலைவரையே சாதியத் தீண்டாமையோடு அணுகி, மக்களாட்சியின் செயலகமான பாராளுமன்றத்தின் திறப்பு விழாவுக்கு அழைக்காது புறக்கணித்த கொடும்நிலை உலகில் எந்த நாட்டிலும் நடந்திராத கேலிக்கூத்தாகும். நாட்டின் முதல் குடிமகளுக்கு இந்நிலையென்றால், இந்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? இல்லை! சனாதனத்தின் ஆட்சி நடக்கிறதா? அரசியலமைப்புச்சாசனம்தான் நாட்டை ஆள்கிறதா? இல்லை! மனுதர்மம் ஆள்கிறதா?

முந்தைய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை ஒடிசாவிலுள்ள பூரி ஜகந்நாதர் கோயிலுக்குள் அனுமதிக்காது அவமதித்ததன் நீட்சியாக, தற்போது திரௌபதி முர்முவையும் டெல்லி ஜெகன்நாதர் கோயிலுக்குள் அவமதித்து வெளியே நிறுத்தியிருப்பது வெட்கக்கேடானதாகும். நாட்டின் முதல் குடிமகனாகி, சட்டத்தின் தலைவராக ஆனாலும், அவர்களை வருணாசிரமத்தின்படிதான் அளவிடுவார்ளென்பது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

President Insulted: Is this Rule of Law or Sanatana Dharma?

The inhumane act of not allowing President Draupadi Murmu to enter the sanctum sanctorum of the Jagannath temple in Delhi is shocking. It is highly condemnable to insult the President by denying her entry into the sanctum sanctorum and allowing Union Minister Ashwini Vaishnaw to worship inside the sanctum sanctorum. It is shameful for the entire country to subject the first citizen to the despicable act of untouchability. This is a disgrace in which every citizen has to bow their head in shame.

Subjecting the President, the head of democracy, to untouchability and not inviting her to the opening ceremony of Parliament is a travesty not seen in any country in the world. If this is the case for the first citizens of the country, is the Rule of Law or the Rule of Sanatana Dharma taking place in this country? Does the Constitution govern the country or Manu Dharma?

It Is a matter of shame that Draupadi Murmu has also been insulted and kept outside the Jagannath temple in Delhi as an extension of the humiliation suffered by the former President Ram Nath Kovind by not allowing him to enter the Jagannath temple in Puri, Odisha. It is an unacceptable atrocity that even if the person from the oppressed community becomes the first citizen of the country and becomes the head of the law, they will be measured according to the Varnashrama Dharma.

முந்தைய செய்திதமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, நிரந்தர பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதம்பி செந்தில் பாலாஜி செய்தது ஊழல் முறைகேடு என்றால், ஆளுநர் ஆர்.என்.ரவி செய்திருப்பது அதிகார முறைகேடு! – சீமான் கண்டனம்