அறிவிப்பு: வேளாண் விளைநிலங்களை அழித்து, பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிட வலியுறுத்தி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் – காஞ்சிபுரம்

328

க.எண்: 2023050204

நாள்: 20.05.2023

அறிவிப்பு:
(
நாள் மாற்றம்)

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4700 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து, நிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, 280 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மக்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக துணைநின்று வருகிறது. இதன் அடுத்தகட்டமாக, மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, இத்திட்டத்தை நிறைவேற்ற முனையும் பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசையும், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசையும் கண்டித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் வருகின்ற 03-06-2023 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெறவிருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 10-06-2023 நாளுக்கு மாற்றப்படுகிறது.

வேளாண் விளைநிலங்களை அழித்து, பரந்தூரில்
புதிய வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிட வலியுறுத்தி
மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்
கண்டனப் பேருரை:
செந்தமிழன் சீமான்
10-06-2023 சனிக்கிழமை, மாலை 04 மணிக்கு

இடம்:
காஞ்சிபுரம்
காந்தி சாலை (பெரியார் தூண் அருகில்)

இம்மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

முந்தைய செய்திமாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி
அடுத்த செய்திகுரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்