மே 18, இனப் படுகொலை நாள்: வீழ்வதல்ல தோல்வி! வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி!, என்ற இன எழுச்சி முழக்கத்தோடு நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், ஒவ்வொரு ஆண்டும் முன்னெடுக்கப்பட்டுவரும் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டமானது, இந்த ஆண்டு தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் விலக்கு, நிலா குளிர்பதனக்கிடங்கு அருகில் உள்ள திடலில் 18-05-2023 அன்று, மாலை 04 மணியளவில் பேரெழுச்சியாக நடைபெற்றது.