கீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை, கான்கிரீட் தளமாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

84

க.எண்: 2022060277
நாள்: 22.06.2022

அறிவிப்பு: (தேதி மாற்றம்)

       கீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை, கான்கிரீட் தளமாக மாற்றி பல்லுயிர் பெருக்கத்தையும் விவசாயத்தையும் பாழாக்கும் திட்டத்தை எதிர்த்து
நாம் தமிழர் கட்சி சார்பாக காங்கேயம் தொகுதி, நத்தக்காடையூர் பேருந்து நிறுத்தம் அருகில்  தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 29.6.2022 அன்று நடைபெறவிருந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது நாள் மட்டும் மாற்றப்பட்டு அதே இடத்தில் 06-07-2022 புதன்கிழமையன்று நடைபெறவிருக்கின்றது.

 

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இடம்: நத்தக்காடையூர் பேருந்து நிறுத்தம் அருகில்

காங்கேயம் தொகுதி. திருப்பூர் மாவட்டம்.

 

நாள்: 06.07.2022 புதன்கிழமை
காலை 10 மணியளவில்

கண்டனப் பேருரை:

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்கள் ஒருங்கிணைந்து நடத்தும் இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, நாடாளுமன்ற, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், தாய்த்தமிழ் உறவுகளும், உழவர் பெருகுடிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
    நாம் தமிழர் கட்சி