முக்கிய அறிவிப்பு:  உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக

103

க.எண்: 2022060288

நாள்: 26.06.2022

முக்கிய அறிவிப்பு:  உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்
வேட்புமனு தாக்கல் தொடர்பாக

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் வரை காலியாகவுள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை வருகின்ற 09.07.2022 அன்று நடத்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, கோயமுத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலியாகவுள்ள மொத்தம் 510 உள்ளாட்சி அமைப்பு பதவியிடங்களுக்கான வேட்மனுத்தாக்கல் நாளையுடன்
(27-06-2022) நிறைவுபெறுகிறது.

ஆகவே, நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளைக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், கட்சி சின்னத்தில் போட்டியிடக்கூடிய 34 பதிவியிடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், ‘விவசாயி’ சின்னத்தை பெறுவதற்கான A மற்றும் B படிவங்களை வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளான 30-06-2022 வரை தேர்தல் அலுவலரிடம் வழங்கலாம். எனவே இதுவரை A மற்றும் B படிவங்களைப் பெறாதவர்கள் (நாளைக்குள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு) உடனடியாக கட்சித் தலைமை அலுவலத்தைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு: கு.செந்தில்குமார் +91-96 0070 9263
தலைமை நிலையச் செயலாளர்

  • நா.சந்திரசேகரன்
     பொதுச்செயலாளர்
    நாம் தமிழர் கட்சி
முந்தைய செய்திஅரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிநியமன முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திராஜபாளையம் சட்டமன்ற தொகுதி – கட்டணமில்லா மக்கள் இணைய சேவை முகாம்