அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றத்திற்கு வலு சேர்ப்பீர்! திரள்நிதித் திரட்டல் | Crowd Funding

3711

க.எண்: 2021020082

நாள்: 28.02.2021

அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றத்திற்கு வலு சேர்ப்பீர்!
திரள்நிதித் திரட்டல்

     2021 தேர்தல் களத்தில் தேர்தல் ஆணையக் கட்டுப்பாட்டு விதிகளின் படி ஒரு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தனக்கான பரப்புரை செலவாக ரூ. 30.8 இலட்சம் வரை   செலவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரும் பொருளாதார வலிமை கொண்ட மத்திய, மாநில ஆளும் மற்றும் எதிர் கட்சிகள் தாம் செய்த மக்கள் நலன்சார்ந்த செயல்களை முன்னிறுத்தி வாக்குக் கேட்காமல் மற்ற வழிகளில் பரப்புரை செய்து வெற்றிபெறும் நோக்கில் களம் காண்கின்றன.

தேசிய – திராவிடக் கட்சிகள் தமக்கான ஊடகத்தைக் கொண்டும் பணபலம் கொண்டும் பிற ஊடகங்களின் துணை கொண்டும் தாங்கள் சார்ந்த செய்திகளை மக்களிடம் எளிதில் கொண்டுசேர்க்கும் சூழலில், சமரசமின்றித் தனித்தியங்கும் தனக்கெனத் தனி ஊடகமற்ற
நாம் தமிழர் கட்சி மக்களைப் பெருமளவில் சென்றடைய பொருளாதாரம் பெரும் தடையாக உள்ளது. நாம் தமிழர் கட்சி நேர்மையுடன் களத்தில் நிற்கும் அறத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் வறுமை கோட்டுக்கு கீழுள்ளவர்கள், உழவர் குடிகள், பணிக்குச் செல்லாத பெண்கள், குறைவான ஊதியம் மட்டுமே ஈட்டும் இளைஞர்கள் ஆகியோரை வேட்பாளர்களாக முன்னிறுத்தி களம் காண்கின்றது.

பரப்புரை வாகனச்செலவு, துண்டறிக்கைகள், கூட்டங்கள், கட்டுத்தொகை என அனைத்திற்கும் கணிசமான பொருளாதாரம் தேவைப்படுகின்றது. சிரமப்படும் வேட்பாளர்களுக்கு உதவவும், தேர்தல் செலவுகளுக்காகவும் மக்களிடம் திரள்நிதித் திரட்டல் (Crowd Funding) மூலம் நிதி திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் நிதியின் வரவு-செலவு கணக்குகளை வெளிப்படையாக இணையத்தில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்திற்குப் பேராதரவு தந்து பொருளுதவி செய்து வலிமை சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றோம்.

நிதி பங்களிக்கும் இணைப்பு: donate.naamtamilar.org

இரா.இராவணன்

பொருளாளர்
நாம் தமிழர் கட்சி