சுற்றறிக்கை: தமிழ்நாடு முழுவதும் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக

321

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பொதுக்கூட்டங்கள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன. இந்நிகழ்வுகளுக்காக வருகை தரும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மண்டல (நாடாளுமன்றத் தொகுதி) அளவிலான பொறுப்பாளர் கலந்தாய்வுகளும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே நாடாளுமன்றத் தொகுதிவாரியாக உள்ள அனைத்து மாநில மற்றும் மண்டல (நாடாளுமன்ற) ஒருங்கிணைப்பாளர்கள் ஒருங்கிணைந்து, தங்கள் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து மாவட்டப் பிரிவுகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் பாசறைகளின் மாநில, மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, மக்கள் பிரச்சினைகள் குறித்தான விரிவான அறிக்கையை தயார் செய்து தலைமை அலுவலகத்திற்கு நேரடி அஞ்சல் அல்லது மின்னஞ்சல் (ravanankudil@gmail.com) மூலமாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மக்கள் பிரச்சினைகளின் அடிப்படையில் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு சுற்றறிக்கை வாயிலாக விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி