துயர் பகிர்வு: திருத்துறைப்பூண்டி, மடப்புரத்தைச் சேர்ந்த புதியபாரதி என்கிற வீரபாண்டியன் மறைவு – குடும்பத்தினருக்கு சீமான் ஆறுதல்

128

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, மடப்புரத்தைச் சேர்ந்த இனமானப்பற்றாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா புதியபாரதி என்கிற வீரபாண்டியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி மீது பெரும் அக்கறையும், தனிப்பட்டு என் மீது பேரன்பும் கொண்டிருந்த ஐயாவின் மறைவுச்செய்தி என்னைப் பெரிதும் வாட்டுகிறது. நாம் தமிழர் கட்சி ஆட்சியதிகாரத்தில் அமர வேண்டுமெனப் பெருவிருப்பம் கொண்டு, திருத்துறைப்பூண்டியில் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வந்த ஐயாவின் இழப்பு ஈடுஇணையற்றது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயாவுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்!

முந்தைய செய்திஉதய்பூரில் கன்ஹையா லால் தேலியைப் படுகொலை செய்திட்ட கொலையாளிகளுக்கு கடும் சட்டத்தின் கீழ் உச்சபட்சத்தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஅத்தியாவசியப் பொருட்களின் மீது அதிகரிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்