அறிவிப்பு: பெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்

184

க.எண்: 2022060266

நாள்: 15.06.2022

அறிவிப்பு: பெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்

நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் நமது ஐயா கக்கன் அவர்களின் பிறந்தநாளையொட்டி, ஐயா பிறந்த ஊரான மதுரை மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டியில் நாம் தமிழர் கட்சி மற்றும் கக்கன் அவர்களின் அறக்கட்டளை சார்பாக வருகின்ற 18-06-2022 சனிக்கிழமையன்று மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

மாலை
05:00 மணி
மலர்வணக்க நிகழ்வு

மதுரை மேலூர் நகரத்திலுள்ள ஐயா கக்கன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு தலைமை ஒருங்கிணைபாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்கிறார்.

மாலை
05.15 மணி
வாகனப்பேரணி

மேலூரிலிருந்து தும்பைப்பட்டி நினைவில்லம் வரை

மாலை
06:00 மணி
நினைவில்லம் பார்வையிடல்

தும்பைப்பட்டியில் உள்ள ஐயா கக்கன் அவர்களின் நினைவில்லத்தை தலைமை ஒருங்கிணைபாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பார்வையிடுகிறார்.

மாலை
06:30 மணி

புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – தும்பைப்பட்டி

புகழ்வணக்க உரை:

செந்தமிழன் சீமான்

இந்நிகழ்வில் கட்சியின் மாநில, நாடாளுமன்ற, மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், தாய்த்தமிழ் உறவுகளும் பெருந்திரளாய் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  • தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
    நாம் தமிழர் கட்சி