குவைத் செந்தமிழர் பாசறையின் ஏழாம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா-2022

165
தமிழர்களின் தேசியத் திருநாளாம் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை, குவைத் செந்தமிழர் பாசறை ஆண்டு தோறும் சிறப்பாக நடத்திவரும் வேளையில் கொரோனா நுண்ணுயிரித் தொற்றின் காரணமாக பெரிய அளவில் கூடி கொண்டாட முடியாத நிலையில் இந்தாண்டு இணையம் வழியாக
நடத்த திட்டமிட்டு கடந்த 14.01.2022, வெள்ளிக்கிழமையன்று ஏழாம் ஆண்டு புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்நிகழ்வில் தொடக்கமாக காலை, மகளிர் பாசறையின் சார்பாக சகோதரிகள் பொங்கலிட்டு இயற்கைத்தாய்க்கும் உழவர்குடி மக்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக படைக்கப்பட்டது.
நண்பகல் 2.00 மணிமுதல் காணொளி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்வில் செந்தமிழர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்திரு தமிழன் ரகு அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
அதையடுத்து செந்தமிழர் பறையிசைக் குழுவினரின் தமிழர்களின் உயிர் இசையாம் ஆதி பறை இசையை இசைத்து சிறப்பித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து எண்ணற்ற மழலைச் செல்வங்களின் கிராமியப்பாடல், நடனம், நாடகம், கவிதை வாசிப்பு என மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி கண்களுக்கு விருந்தளித்தனர்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக, டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனத்தலைவர் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தமிழ்த்திரு.முனைவர். செ.மு. ஹைதர் அலி அவர்கள் கலந்துகொண்டு தமிழர் திருநாள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்கள்.
மேலும் தாயகத்திலிருந்து நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புச்சகோதரி தமிழ்த்திருமதி. மா.கி. சீதாலட்சுமி அவர்களும் வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புச்சகோதரி தமிழ்த்திருமதி. இரா. நூர்ஜகான் அவர்களும் கலந்துகொண்டு மிகச்சிறப்பான முறையில் தமிழர் மெய்யியல் மற்றும் பண்பாட்டு பேருரையாற்றினார்கள்.
இந்நிகழ்வின் தொகுப்பாளர்களாக தமிழ்த்திருமதி. ச.சித்ராதேவி தமிழ்திருமதி வயலெட் சுகந்தி ஸ்டாலின் மற்றும் தமிழ்த்திரு.கல்யாண முருகேசன் ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.
இந்த நிகழ்வை சிறப்பாக ஒழுங்கமைத்து நடத்திய அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் மற்றும் எங்களுக்கு எப்போதும் தோளுக்கு துணைநின்று உதவிவருகின்ற தமிழ்ப்பெரும் முதலாளிகளான, TVS குழுமத்தின் நிறுவனத்தலைவர் தமிழ்த்திரு முனைவர் செ.மு.ஐதர் அலி அவர்களுக்கும், மூவேந்தர் உணவக உரிமையாளர் தமிழ்த்திரு. நெடுமாறன் அவர்களுக்கும்,மங்காப் கீர்த்தி உணவகம் உரிமையாளர் தமிழ்த்திரு. செல்வராசு அவர்களுக்கும் மங்காப் சரவணா உணவகம் உரிமையாளர் தமிழ்த்திரு சாமி அவர்கள் மற்றும் பாகில் மெரினா கண்ணாடியகம் உரிமையாளர் தமிழ்த்திரு சையத் அன்வர் பாசறை சார்பாக நன்றி தெரிவித்தனர்

நிகழ்ச்சியின் நிறைவாக விழாவில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்திய மழலைச் செல்வங்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் பாசறையின் சிறந்த செயல் வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
முந்தைய செய்திகுளித்தலை சட்டமன்றத் தொகுதி – தை பூச திருநாள்
அடுத்த செய்திகுவைத் செந்தமிழர் பாசறையின் ஏழாம் ஆண்டு குருதிக்கொடை நிகழ்வு