சென்னை அரும்பாக்கத்தில் வீடுகளை இடித்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட பூர்வகுடி மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்

142

சென்னை அரும்பாக்கத்திலுள்ள இராதாகிருஷ்ணன் நகரில் நீண்டகாலமாக ஆதித்தமிழ்குடியினர் வாழ்ந்துவந்த குடியிருப்புகளை அகற்றி, வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (01-08-2021) நேரில் சந்தித்து ஆறுதல்கூறி, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

https://youtu.be/8_Z0Yw-Fyvc
 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளும் திமுக அரசின் அதிகாரப்போக்கினால், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த வசிப்பிடத்திலிருந்து ஆதித்தமிழ்க்குடியினரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே அப்புறப்படுத்தும் கொடுஞ்செயலில் ஈடுபடுவதா என கேள்வியெழுப்பினார். மண்ணின் மைந்தர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்வதற்கு கண்டனம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும்வரை துணைநிற்பேன் என்றும் அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் வசிப்பிடங்களிலேயே நிரந்தர குடியிருப்புகளை ஏற்படுத்தி தருமாறு தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி