நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோதும் கொரோனாவுக்கு எதிரான போரில் களப்பலியான மருத்துவர் சண்முகப்பிரியாவின் ஈகத்தை எண்ணி மெய்சிலிர்க்கிறேன்! – சீமான்

125

கண்ணீர் வணக்கம்!

மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வந்த 8 மாத கர்ப்பிணியான மருத்துவர் சண்முகப்பிரியா அவர்கள் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். ஈடுசெய்யா முடியாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதல் சொல்ல இயலாது கலங்கித் தவிக்கிறேன்.

நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோதும் நெருக்கடியான இப்பேரிடர் காலத்தில் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்திற்காக விடுப்பு எடுக்காது அர்ப்பணித்து பணியாற்றித் தொற்றுக்குள்ளாகி உயிர்துறந்த தங்கை சண்முகப்பிரியாவின் ஈகத்தை எண்ணி மெய்சிலிர்க்கிறேன். தன்னலம் என்பது துளியுமில்லாது மகத்தான மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நோய்த்தொற்றால் களப்பலியான தங்கையின் மறைவு ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பாகும்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி