வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி சீமான் தலைமையில் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

225

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி நடத்தும் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 19-12-2020 சனிக்கிழமை மாலை 04 மணியளவில் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.

இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகமெங்கும் உள்ள கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின்  பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் உணர்வெழுச்சியுடன் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

உழவு இல்லையேல்; உணவு இல்லை!

உணவு இல்லையேல்; உயிர்கள் இல்லை!

உயிர்கள் இல்லையேல்; உலகு இல்லை!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!

– செந்தமிழன் சீமான்