[படங்கள் இணைப்பு] திசையன்விளையை தொடர்ந்து (26-03-11 )உவரி,வள்ளியூர்,களக்காடு பகுதிகளில் செந்தமிழன் சீமான் காங்கிரசுக்கு எதிரான பரப்புரை.

90

தமிழக சட்ட மன்றத்தேர்தலில் “காங்கிரசைக் கருவருப்போம்”எனும் முழக்கத்துடன் களம இறங்கி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளை,உவரி,வள்ளியூர், ஆகிய இடங்களிலும்,நான்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட களக்காடு எனும் இடத்திலும் தேர்தல் பரப்புரை செய்து வருகின்றனர்.

நேற்று உவரி மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பால் பாதிப்புக்கு உள்ளாகி கேட்பாரற்று தவிக்கும் மீனவர் சமூகத்தை சந்தித்து பரப்புரை செய்தார். மீனவர்களுடன் நேரடியாக உரையாடினார். காங்கிரஸ் செய்த துரோகங்களை விளக்கி கூறினார். மாலை நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ஆயிரக்காணக்கான மக்கள் பங்கேற்றனர்.

காங்கிரசு கட்சி போட்டியிடும் 63 சட்டமன்றத் தொகுதிகளிலும் நாம்தமிழர் கட்சி பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளது. “காங்கிரசின் வீழ்ச்சி! தமிழினத்தின் எழுச்சி!”எனும் முழக்கம்! 1967ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் எந்த அரசியல் சக்தியும் இக்கருத்தை முன் வைக்க முன்வராத நிலையில், நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் லச்சக்கனக்கான தமிழர்களை படுகொலை செய்ய துணைபோன பழம்பெரும் கட்சியான காங்கிரசை எதிர்த்து பரப்புரை செய்கிறது.

தமிழகத்தின்,தமிழர்களின்,தமிழினத்தின் உரிமைக்காக எப்போதும் குரல் கொடுக்காத கட்சியான காங்கிரசு கட்சியை தமிழக அரசியலில் ஒழிக்கவேண்டும் எனும் பரப்புரை இளைஞர்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளதன் அடையாளமாக பெருந்திரளாக மக்கள் நாம் தமிழர் கட்சியின் பரப்புரை கூட்டங்களுக்கு கூடுகின்றனர்.

நேற்று முன்தினம் 25-3-2011- திசையன்விளை -ராதாபுரம் தொகுதியில் பிரச்சாரம் ஆரம்பமானது. நேற்று 26-3-2011- உவரி,வள்ளியூர்-ராதாபுரம் தொகுதி26-3-2011-களக்காடு-நான்குநேரி தொகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. மேலும் திருவாளர்கள் சிவக்குமார், சாகுல்ஹமீது, திலீபன், ஜெயசீலன்,நல்லதுரை,பேச்சிமுத்து,பேராசிரியர் அறிவரசன்,ரேவதி நாகராசன், அமுதா நம்பி, பட்டுக்கோட்டை சாமிநாதன், மதுரை தி.அரப்பா உட்பட நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

முந்தைய செய்திகடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பிரச்சார பேரணி 26.03.2011
அடுத்த செய்திசத்தியமாய் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்: உவரி மக்கள் சீமானுக்கு கொடுத்த உறுதிமொழி