சென்னையில் 13 வயது சிறுவன் ராணுவத்தினரால் சுட்டுக்கொலை

18

சென்னையின் தீவு திடல் பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில் பாதாம் மரத்தில் பழம் பறிப்பதற்காக மரத்தின் மீது ஏறிய 13 வயதேயான சிறுவன் தில்சான்னை ராணுவ குடியிருப்பு பாதுகாவலர்கள் தலையில் சுட்டு படுகொலை செய்துள்ளனர்.

சிறுவன் என்று கூட பாராமல் மனித தன்மையற்று சுட்டு கொன்ற பின்பு அச் சிறுவனை இலைகளால் சுற்றி சாலையின் ஓரத்தில் போட்டுள்ளனர். அச் சிறுவன் இறந்து விழுந்த இடத்தில் இருந்த இரதக்கரையையும் தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளனர், இந்த தேசத்தை பாதுக்காக்கும் ராணுவத்தினர். இச்செய்தியை அறிந்தவுடன் அப்பகுதி மக்கள் வெகுண்டெழுந்து சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழம் பறிக்கும் நோக்கத்தோடு மரத்தில் ஏறும் சிறுவனை சிறு மிரட்டலில் விரட்டி இருக்க முடியும். இதை செய்யாமல் துப்பாக்கியால் சிறுவனின் தலையில் சுட்டு கொன்றுள்ளனர் மனித நேயமற்ற இந்திய ராணுவத்தினர்.

இது குறித்து ராணுவ அதிகாரி சசி நாயர் கூறுகையில் ” ராணுவ குடியிருப்பு பாதுகாவலர்களிடம் ஆயுதமே இல்லை, அவர்களிடம் லத்தி கம்புகள் மட்டுமே உள்ளது” என்று கூறியுள்ளார்.

இச் செய்தி அணைத்து மக்களிடத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செய்திநெய்வேலியில் வட்டம் 11-இல் நடைபெற்றுவரும் 14 ஆவது புத்தக கண்காட்சியில் நாம் தமிழர் வெளியீட்டகம் பங்கேற்கிறது
அடுத்த செய்திநேற்று (03.07.11) ஈரோடு மாவட்டத்தில் நாம் தமிழர் கொடியேற்று விழா நிகழ்வு நடைபெற்றது