சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து 350 கட்சியினர் கைது

30

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி்க் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளிக்கப்படுவதை எதிர்த்து இன்று ஆர்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. இன்று குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் முன்பு ஊட்டி, கோவை,திருப்பூர்,ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் இலங்கையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்த சிங்கள இனவெறி ராணுவத்தினருக்கு தமிழர்களின் உணர்வுகளை சிறிதும் மதிக்காமல் தமிழகத்திலேயே பயிற்சி அளிக்கும் இந்திய ராணுவத்தையும், இந்திய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்திலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 350 நாம் தமிழர் கட்சியினரை கைது செய்து குன்னூர் ஜெயின் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த ராசு, பென்சமின் (கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), இளைஞர் பாசறை ஒருங்கினைப்பாளர் பேரசிரியர் கல்யாண சுந்தரம், கோவை மாவட்ட வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த விஜய ராகவன், திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் சமரன் பாலா, ஒருங்கிணைப்பாளர் செல்வம், மற்றும் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை தமிழ்செல்வன், வீர முருகன், பெரியநாயக்கன் பாளையம் ஆனந்தராஜ், மதுக்கரை ஆனந்த உள்ளிட்ட 350 நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


முந்தைய செய்திஇலங்கை அரசுக்கு நிதியுதவிகள் ரத்து: அமெரிக்க நாடாளுமன்றக் குழு ஒப்புதல்
அடுத்த செய்திஇராணுவ ஆட்சியின் கீழே இலங்கையில் தமிழர்கள் வாழ்கின்றார்கள்! மலேசியத் தூதுக்குழு தெரிவிப்பு