சூடான் உள்நாட்டுப் போர்: ஆபத்தானச் சூழலில் சிக்கித்தவிக்கும் தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

237

சூடான் உள்நாட்டுக் கலவரத்தால் அங்கு ஏற்பட்டுள்ள ஆபத்தானச் சூழலில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு மாநில மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவர தூதரகம் மூலம் இந்திய ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

பணி காரணமாக சூடான் நாட்டிற்கு சென்ற உறவுகளை எண்ணி அவர்களின் குடும்பத்தினர் தவித்துநிற்கும் வேளையில், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகத்தின் மூலம் இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து, அங்கு சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து தாயகம் மீட்டுவர உரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டுமென தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.