அறிவிப்பு: மே 07, சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர் கோட்டம்

114

க.எண்: 2023040172
நாள்: 25.04.2023

அறிவிப்பு: மே 07, சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை வள்ளுவர் கோட்டம்

பன்னாட்டு நிறுவனங்களுக்காக, சாமானிய மக்களைப் பாதிக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்புத் திட்டங்கள்) சட்டத்தினைத் உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், தொழிலாளர்கள் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, கடும் எதிர்ப்பின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள ‘தொழிற்சாலைகள் சட்டத்திருத்தங்களை’ முற்றாக கைவிட வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற
07-05-2023 அன்று பிற்பகல் 03 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில்,
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

மாநிலம் தழுவிய அளவில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கும் இம்மாபெரும் ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாக உடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபன்னாட்டு நிறுவனங்களுக்காக, சாமானிய மக்களைப் பாதிக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் (சிறப்புத் திட்டங்கள்) சட்டத்தினை திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிருமண மண்டபங்களிலும், விளையாட்டு அரங்களிலும் மதுபானம் வழங்கும் முடிவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்