தொடர் போராட்டங்களுக்குப் பிறகு திருச்சி சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிப்பு! – தமிழ்நாடு அரசுக்கு சீமான் நன்றி

146

திருச்சி, சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிக்கப்பட்ட செய்தியறிந்து மகிழ்ந்தேன். நீண்டநெடுநாட்களாக நடந்தேறிய ஈழச்சொந்தங்களின் பட்டினிப்போராட்டத்திற்கும், கருத்துப்பரப்புரைக்கும் பிறகு, ஆறுதலாகக் கிடைக்கப்பெற்றிருக்கிற விடுதலை அறிவிப்பைப் பெரிதும் வரவேற்கிறேன். இம்முன்னெடுப்பைச் செய்த தமிழக அரசுக்கு எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

இதேபோல, இந்தியச்சட்டத்தின்படி தங்களை ஏதிலிகளெனப் பதிவுசெய்திருக்கும் ஏனைய ஈழச்சொந்தங்களையும் மற்ற சிறப்பு முகாம்களிலிருந்து விடுவிக்க வேண்டுமெனவும், காவல்துறையின் கியூ பிரிவினை விரைந்து கலைக்க வேண்டுமெனவும் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கிறேன்!

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகாற்றில் பறக்கவிட்டத் தேர்தல் வாக்குறுதிகள் பல இருக்கையில் அவற்றை நிறைவேற்றிவிட்டதாகப் பெருமைப்பட்டுக்கொள்வதா? உளச்சான்று உறுத்தவில்லையா முதல்வரே? – சீமான் அடுக்கடுக்கான கேள்விகள்
அடுத்த செய்திராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடும் தம்பி ராபர்ட் பயசின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு அவருக்குச் சிறைவிடுப்பு வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்