தமிழக அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் கிராமப்புற மாணவர்கள் இணையவழியில் விண்ணப்பித்திட ஏதுவாக முகாம்கள் அமைத்து மாணவர் பாசறை நிர்வாகிகள் உதவ வேண்டும்!
– நாம் தமிழர் மாணவர் பாசறை
தமிழகத்தின் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலுள்ள 92,000 இளநிலைப்பட்டப்படிப்புகளுக்கான 2020-21 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க தமிழக அரசின் கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்களை இணையத்தில் பதிவுசெய்ய சூலை 20 தொடங்கி 31 வரையிலும், விண்ணப்பங்களைப் பதிவுசெய்தோர் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய சூலை 25 வரையிலும், ஆகஸ்ட் 08 வரையிலும் கால அளவு வழங்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் வலியுறுத்தலின்படி, கிராமப்புற அடித்தட்டு வர்க்கத்து மாணவர்கள் இணையவழியில் விண்ணப்பிக்க வசதியாக நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக ஆங்காங்கே கட்சியின் அலுவலங்களிலோ, இன்னப் பிற இடங்களிலோ இணையவழி சேவையோடு கூடிய முகாம் அமைத்து அம்மாணவர்கள் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டிய இணையதளம்,
www.tngasa.in
இணையவழி விண்ணப்பித்தல் தொடர்பான கல்லூரிகளின் பெயர்ப்பட்டியல், குறீயீடு வரிசை,
பாடப்பிரிவுகள்,
விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம்,
சான்றிதழ்கள், புகைப்படம் பதிவேற்றம் செய்தல் போன்ற விபரங்களைச் சேர்க்கைக் கட்டுப்பாட்டு அறைகளின்
கீழ்க்காணும் தொலைபேசி எண்கள் மூலமாக தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
044 – 22351014
044 – 22351015
044 – 28260098.
– மாணவர் பாசறை
நாம் தமிழர் கட்சி