புதிய கல்விக்கொள்கை மற்றும் இந்தி திணிப்பிற்கு எதிராக ஐ.நா. மன்றத்தில்

33

புதிய கல்விக்கொள்கை மற்றும் இந்தி திணிப்பிற்கு எதிராக ஐ.நா. மன்றத்தில் குரலெழுப்பிய நாம் தமிழர் கட்சி
**********************************************************************

ஐக்கிய நாடுகள் சபை ஆணைய தலைவர் அவர்களே,

இந்தியாவில் வாழும் பல்வேறு மொழி வழி தேசிய இனங்களின் பொருளாதார , சமூக , கலாச்சாரங்களை பாதுகாக்க இந்திய ஒன்றியம் பல்வேறு மொழி வழியாக உருவாக்கப்பட்ட மாநிலங்களை கொண்ட ஒரு கூட்டாட்சி ஒன்றியமாகத்தான் உருவாக்கபட்டது.

தற்போது முன்மொழியப்பட்ட புதிய கல்விக்கொள்கை இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக விளங்குகிறது . இனப்பரவலை மாற்றி அமைக்க ஆளும் மத்திய அரசாங்கம் ஹிந்தி மற்றும் அதன் கலாச்சாரத்தை இந்தியாவின் அனைத்து மக்களிடமும் அவரவர் தாய்மொழி பாகுபாடின்றி திணிக்கிறது.

பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் உரிமை , பேராசிரியர்களை நியமிக்கும் உரிமை மாநில அரசிடம் இருந்து புதிய கல்விக்கொள்கையால் பறிக்கப்படுகின்றன.

மாணவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை மாநில அரசிடம் இருந்து பறிக்கப்பட்டு தேசிய தேர்வு நிறுவனத்திடம் மாற்றப்படும்.

இது இந்து மேல் சாதி மேலாதிக்கத்தை கொண்ட சமயம் சார்ந்த அழிந்த போன மொழியான சமஸ்கிருதத்தை அனைத்து மாநிலங்களுக்கும் திணிக்கிறது.

பெரும்பான்மை மக்கள் வாழும் கிராமங்களிலும், நகரங்களிலும் கல்வி நிலையங்களின் வசதியை கூட்டாமல் பாடங்களின் தரத்தை மட்டும் கூட்டுவது இந்தியாவில் வாழும் மேல்தட்டு மக்களுக்கும், தனியார் கூட்டு நிறுவனங்களுக்கும் மட்டுமே பயனளிக்கும் .

புதிய கல்வி கொள்கை படி தமிழ்நாடு அரசு 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவித்துள்ளது மாணவர்களின் உளவியலை வெகுவாக பாதிக்கும் .

இந்தியா பல்வேறு தேசிய இனங்கள் வாழும் கூட்டாட்சி நாடாக இருப்பினும் இந்துத்வா கொள்கைகளை கொண்ட மத்திய அரசாங்கம் அதன் ஒரு மொழி , ஒரு கலாச்சாரம், ஒரு மத க்கொள்கையை இந்த புதிய கல்விக்கொள்கை மூலம் செயல்படுத்த முனைவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

தேசிய இனங்களின் உரிமைகளை பாதுகாக்கும் சர்வதேச உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்து வைத்துள்ளது . இந்தியாவில் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் கூட்டாட்சி உரிமையை பறிக்கும் இந்த புதிய கல்வி கொள்கையை இந்திய மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற்று மாநிலங்களிடம் இருந்து பறித்து சென்ற கல்வி உரிமைகளை அந்தந்த மாநிலங்களுக்கே வழங்க ஐக்கிய நாடுகள் சபை ஆணையம் வழியாக மிகக்கடுமையாக வலியுறுத்துகிறோம். நன்றி

Madam Vice President

India was formed as an union of states consisting various linguistic nationalities to protect their respective socio , economic , cultural identities.

The proposed new education policy of India is a huge threat to federalism. To alter demography central government imposes Hindi and its culture as a must learn for all states regardless of their respective mother languages.

Rights of states to form an univeristy , appointment of professors will be taken away.

States will loose their authority over selection process of students and will be transferred to centralized National Testing Agency.

It imposes learning the religious , dead language Sanskrit which imposes upper caste Hindu hegemony over the others.

Improving quality of subjects without improving facilities in majority of towns and villages will only benefit elites, private educational corporates of India.

The move of the TamilNadu government to introduce competitive exam at 5th grade would adversely impact children psychologically .

It is very much visible that Hindutva central government is having a hidden agenda to impose it’s one language , one culture, one religion policy despite India is a federal country.

As the proposed policy totally denies the federal rights of Indians, we strongly urge the council that India must immediately transfer the snatched educational rights back to respective states . Thank you

முந்தைய செய்திஅறிவிப்பு: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவள்ளூர் மாவட்டக் கலந்தாய்வு
அடுத்த செய்திமுல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெளிப்பாடே! – சீமான் கண்டனம்