செந்தமிழன் சீமான் பெயரை உச்சரிக்கும் தகுதி இல்லாதவர் எழுத்தாளர் சேரன்! – தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

1

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலம் தொட்டு இன்று வரை சேரன் ஒரு  குழப்ப வாதியாகவும் தன் அங்கீகாரத்திற்காக எதிரிக்குத் தெரிந்தோ தெரியாமலோ இருப்பதை  காட்டிக் கொடுப்பவராகவுமே இருந்து வருகின்றார்.

நீண்ட காலமாக விடுதலைப் புலி எதிர்ப்பாளராகத் தன்னை அடையாளம்  காட்டிக் கொண்ட சேரன் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின்னர் தன்னை ஒரு தமிழ்த் தேசியவாதியாக காட்ட முனைந்தார்.  ஆனால்  மீண்டும்  அவர்   தமிழின எதிர்ப்புக் கூடாரத்தின் செல்லப்பிள்ளையாகி விட்டதை அவரது அண்மைக் கால   பேச்சுக்கள்  எடுத்துக் காட்டுகின்றன.

“அறம் சார்ந்து காலசுவடிற்கு எதிரான போராட்டம் செய்தவர்களை எழுபதுகளில் அமிர்த்தலிங்கதிடம் மைக்கை பிடிங்கியவர்களிடம் இருந்த வெறியை கண்டேன்.    மலையாளிகள் தமிழர்களைத் தாக்கினால் திருப்பி தாக்குவதை தவிர வேறு வழி இல்லை” என்று சீமான்  கூறியதை சிங்கள அமைச்சர் பேசுவதைப் போல் இருக்கிறது என்று பாமரன் புத்தக வெளியீட்டு விழாவில்  சேரன் பேசியுள்ளார். 

 

 

தமிழ்த் தேசியத்தை உளமார நேசிக்கிற ஒவ்வொரு தமிழனுக்கும் சீமானையோ அன்றி மே -17 இயக்கத்தினரையோ விமர்சிக்கும் தகுதியும் உரித்தும் இருக்கிறது. ஆனால் இந்திய உளவு நிறுவனத்துக்குத் தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் தமிழ்நாட்டுக் கிளையாக இயங்கிக் கொண்டு இருக்கின்ற ‘காலச்சுவடு’ என்ற மலையாளப் பார்பானியக் கூடாரத்தில் உட்காந்து  இருப்பவர்களுக்கு அந்தத் தகதியோ உரிமையோ  இல்லை.  

கடந்த 15 ஆண்டுகளாக வெளிப்படையாகவும் பின்தளம் சார்ந்தும் தமிழ்த் தேசியத்தை முன்னிலைப் படுத்தியும் தமிழீழ விடுலைப் போராட்டத்துக்குத் தனது பேச்சாலும் எழுத்தாலும் மூச்சாலும் வலிமை சேர்த்து வருபவர் செந்தமிழன் சீமான்.  அவர் ஒரு ஒடுக்கப்பட்ட  இனத்தின் விடுதலைக்காகப்  போராடும் போராளி. பலமுறை சிறை சென்றிருக்கிளார்.மலையாளிகள் தாக்கினால் தற்காப்புக்காக அவர்களை எதிர்த்துத்  தாக்குவது இனவாதம் ஆகாது. தமிழர்கள் தாக்காத போதும் தாக்கும் சிங்கள ஆட்சியோடு அதனை ஒப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது.
 
மகாவம்ச மேலாண்மைச் சிந்தனையில் மூழ்கித் தமிழர்களை அடக்கி ஒடுக்கி கொடுங்கோலாட்சி நடத்தும்  சிங்கள ஆட்சியாளர்களோடு செந்தமிழன் சீமானை ஒப்பிட்டுப் பேசுவது  அறியாமை ஆகும்.  முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் சிறிலங்கா அரசு தீவிர இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளது. தமிழர்களது காணிகள் கையகப்படுத்தப்பட்டு அங்கு திட்டமிட்ட முறையில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள். தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில்  பாரிய படைத் தளங்கள், படைக் குடியிருப்புக்கள்,  படை முகாம்கள், பவுத்த விகாரைகள், புத்தர் சிலைகள் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றன.தமிழ் நாட்டில் தமிழின எதிர்ப்பு என்பது  காலச்சுவடு என்ற பார்ப்பனக் கூட்டத்தின் எழுதாத வேதமாக இருந்து வருகிறது. தமிழீழப் போராட்டம் என்றாலே பயங்கரவாதிகளின் போராட்டம் என்று காலச்சுவடு கொச்சைப்படுத்திவந்திருக்கிறது.  அதில் தமிழ் நாட்டுப் பார்பனீயத்தின் இராசகுரு துக்ளக் சோ, சுப்பிரமணியன் சுவாமி,  இந்து இராம் போன்றவர்கள் வெளிப்படையாகத் தெரிந்த முகங்கள்.சேரன் கடந்த 2001 ஆண்டிலும் இதே காலச்சுவடு கூடாரத்துடன் சேர்ந்து தமிழீழத்  தேசியக் கவிஞரான உணர்ச்சிக் கவிஞர்  காசி ஆனந்தன் அவர்களைத் தாக்கியமை இங்கு நினைவு கூரத்தக்கது

சேரன் குறித்து மக்களை விழிப்பாக இருக்கும்படி  கேட்டுக் கொள்கிறோம்.

-தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

ஊடகங்களின் தொடர்புக்கு: 

திரு.வேலுப்பிள்ளை தங்கவேலு (தலைவர்தமிழ்ப்படைப்பாளிகள் கழகம்)

 

தொலைபேசி இலக்கம்:    +14162811165

முகவரி:

 56 Littles Road

Toronto, ON,

Canada

M1B 5C4

 

2 COMMENTS

 1. முதல் முதலாக என்னை மன்னிக்கவும், காரணம் நான் பிறந்த ஊர் தமிழ் நாடு அல்லது இந்திய அல்ல. அதனால் என்னுடிய தமிழ் குறைவாக தான் இருக்கிறது. இப்பொழுது நான் ஆங்கிலத்தில் ஏலதுகிறேன். தயவு செய்து அதை படிக்கவும்.

  Mr. Seeman Thambi or his team whenever they speak on stage to the people should in the final closing of their speech pose these three pertinent questions to the people present; that is by asking them by raising their hand. It goes like this:
  1. DO YOU WANT TO ABOLISH CORRUPTION IN TAMIL NADU?
  2. DO YOU WANT TO ABOLISH CRONYISM IN TAMIL NADU?
  3. DO YOU WANT TRANSPARENCY IN THE ADMINISTRATION OF TAMIL NADU?
  THEN, YOU TELL THE AUDIENCE THIS:” உங்களுக்கு இவை எல்லாம் வேன்றுமனால், தயவு செய்து நாம் தமிழர் கட்சிக்கு உங்கள் வாக்கை அளியுங்கள்.மத்ததை நாங்கள் கவனித்து
  கொள்கிறோம். இது சத்தியம்!
  In English:”IF YOU WANT ALL THESE TO BE ESTABLISHED, THEN PLEASE VOTE FOR NAAM TAMILAR KATCHI. THE REST WE WILL TAKE CARE. WE SWEAR UPON THIS! NAAM TAMILAR KATCHI!
  Watch how many people respond by raising their hands. You see, any citizens would want a clean, efficient and a transparent nation. Therefor if you observe a good response then you know how the people are responding to you and you can gauge the possible support from those people.
  Thank you! Just Try this experiment! Good Luck! I cannot vote. I am a PIO and I support your fight because I am a Tamilan!

 2. Dear Brother Seeman,
  I just want to share my opinion, regarding the work tension in private sector like covai, tirupur, karur like this, we are here working hard day and night, whether workers or staff members we have huge work to do daily, but Sunday only we have a holiday, one day is not enough to spend time with our family, we were worked lot, bust rest low,
  we finished our work in Saturday 8 o clk, took bus in 9, reached home in 12 or 1 o clk, morning waked up 8, when lunch finished again we start our work place in 8 o clk or morning 6. This made us high work pressure,
  ” so my opinion is kindly encourage satusrday,sunday leave for all private companies like IT people.
  This is my kind request,
  please reply the mail

Comments are closed.