மத்திய அரசு ஐ.நா மன்றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா அரசு கொண்டு வந்த மனித உரிமை தீர்மானத்தினை எவ்வித நழுவலும் இன்றி தீர்க்கமாக ஆதரிக்க வேண்டும் என்று கோரி நாகையில் 18-03-2012 அன்று நடைப்பெற்ற பொதுக்கூட்டம் – நிழற்படங்கள் இணைப்பு !!

27

கடந்த 18-03-2012 அன்று நாகப்பட்டினம் அவுரித்திடலில் இந்தியாவின் மத்திய அரசு ஐ.நா மன்றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா அரசு கொண்டு வந்த மனித உரிமை தீர்மானத்தினை எவ்வித நழுவலும் இன்றி தீர்க்கமாக ஆதரிக்க வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் தங்கம் நிறைந்த செல்வம் தலைமை தாங்கினார். இளைஞர் பாசறை மாவட்ட அமைப்பாளர் அப்பு முன்னிலை வகித்தார்.  இக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில், தலைமை கழக பரப்புரையாளர் வெற்றிசீலன், மக்கள் மருத்துவர் மன்னை பாரதிச்செல்வன், திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தென்றல் சந்திரசேகர் உள்ளீட்ட பலர் உரையாற்றினர். கூட்டத்தில் சேனல் 4 வெளியிட்ட ‘சீறிலங்காவின் தண்டிக்கப்படாத குற்றங்கள்’ என்ற ஆவணப்படம் ஒளிபரப்பப் பட்டது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு நாம் தமிழர் பொதுக்கூட்டத்தினை எழுச்சியுற செய்தனர்.

முந்தைய செய்திகூடங்குளம் நோக்கி ஜனநாயக உரிமை காப்பு நடைபயணம் – சீமான் அழைப்பு
அடுத்த செய்திஐ.நா.தீர்மானம்: நியாயமான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறது இந்தியாவின் திருத்தம்: நாம் தமிழர் கட்சி