திருப்பூர் வடக்கு தொகுதி – மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி
திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 18.04.2021 அன்று பொங்குபாளையம் பகுதிகளில் ஏற்கனவே நட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு தொகுதி – தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்குதல்
திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15 வேலம்பாளையம் பகுதியில் 19.04.2021 அன்று பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கப்பட்டது
திருப்பூர் வடக்கு தொகுதி – நடிகர் விவேக் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 17.04.2021 அன்று மாலை 15 வேலம்பாளையம் பகுதியில் மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
சோளிங்கர் தொகுதி – தண்ணீர் பந்தல் அமைத்தல்
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தருமநீதி கிராமத்தில் அன்று 18/04/2021 தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
மதுரை வடக்கு தொகுதி – சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் புகழ் வணக்க நிகழ்வு
14.4.2021 அன்று மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சட்டமேதை டாக்டர். அம்பேத்கார் அவர்களின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு தொகுதி அலுவலகமான பாண்டியன் குடிலில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
மதுரை வடக்கு தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
18.04.2021, அன்று மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது,
மதுரை வடக்கு தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
21.04.2021 அன்று நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு தொகுதி
சார்பாக கற்பகம் நகர், சம்பக்குளம், பகுதியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
பென்னாகரம் தொகுதி – கபசுரக்குடிநீர் வழங்குதல்
22.04.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பாப்பாரப்பட்டி
வாரச்சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர்
வழங்கப்பட்டது.
ஆலங்குடி தொகுதி – கபசுரகுடி நீர் வழங்குதல்
நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி சார்பில் கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் 24/4/2021 சனிக்கிழமை கொரோனா நோய் பரவல் தொற்றை தடுக்கும் விதமாக கபசுரகுடி நீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
பாவேந்தர் பாரதிதாசன் – புகழ் வணக்க நிகழ்வு
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் 57 நினைவு நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து...









