கம்பம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை திருவிழா
கம்பம் சட்டமன்றத் தொகுதி கோம்பை நகர உறுப்பினர் சேர்க்கை முகாமில் 34 உறவுகள் நமது கட்சியில் இணைந்துள்ளார்கள்.
செய்யாறு தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
அனக்காவூர் ஒன்றியம் மடிப்பாக்கம் கிராமத்தில் புலிக்கொடியேற்றம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. திமுக உட்பட மாற்றுகட்சியில் இருந்து நாம் தமிழரில் இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் ஒன்றியம் கொடிகம்பம் நடுவிழா
பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட து.களத்தூர் கிராமத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது, அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்
மதுராந்தகம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
05.03.2023 மதுராந்தகம் தொகுதி, அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நேமம் பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
திருப்போரூர் தொகுதி மரக்கன்று நடுதல்
11.03.23 சனிக்கிழமை அன்று திருப்போரூர் தொகுதி குழிப்பந்தண்டலத்தில் தி.க.குன்றம் ஒன்றியதலைவர் திரு.ராஜா தலைமையில் 16 இலுப்பைமர கன்றுகள் வைக்கப்பட்டன.இந்த கன்றுகளை தொகுதி செயலாளர் திரு. தேவராஜ் அவர்கள் இலவசமாக வழங்கினார்.
இராணிப்பேட்டை தொகுதி மாற்று கட்சியினர் இணையும் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதியில் மாற்ற கட்சியினர் இணையும் நிகழ்வு நடைபெற்றது.
கூடலூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
கூடலூர் தொகுதி 19.03.23 ஞாயிற்றுக்கிழமைகட்சியின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் கூடலூர் பொதுக்கூட்டம் தொடர்பாக தொகுதி கலந்தாய் கூட்டம் நடைபெற்றது.
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாகரல் கிராமத்தில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இக் கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம்
நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி மார்ச் மாத கலந்தாய்வு கூட்டம், தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எதிர்வரும் கண்டோன்மெண்ட் நகர தேர்தல் பணிகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி தென்மேற்கு ஒன்றிய கிராமசபை கூட்டம்
மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்மேற்கு ஒன்றியம், சித்தாம்பூர் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் 22.03.2023(வியாழக்கிழமை) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக 5 முக்கிய கோரிக்கைகள் வழங்கப்பட்டன.