நெய்வேலி நாம்தமிழர் கட்சியின் சார்பாக சாலையில் எச்சரிக்கை பதாகை

நெய்வேலி நாம்தமிழர் கட்சியின் சார்பாக  பண்ருட்டி - வடலூர் சாலையில் கண்ணுத்தோப்பு பகுதியில் அமைந்துள்ள   தடுப்புசுவர் சேதமடைந்துள்ள குறுகிய பாலத்தில் தொடர் விபத்து நடைப்பெறுவதால் அவ்வழியாக  வாகனத்தில் செல்லும் பயணிகளுக்கு விபத்தை தவிர்க்க  எச்சரிக்கை பதாகை  வைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி சோனியா காந்தி உருவபொம்மை எரிப்பு

கள்ளக்குறிச்சி சோனியா காந்தி உருவபொம்மை எரிப்பு

கன்யாகுமரி மேற்கு மாவட்டம் சார்பில் குளச்சலில் வைத்து ௨௩-௨-௨௦௧௪ (23-02-2014)-ம் நாள் மாவட்ட கல்ந்தாய்வு

கன்யாகுமரி மேற்கு மாவட்டம் சார்பில் குளச்சலில் வைத்து ௨௩-௨-௨௦௧௪ (23-02-2014)-ம் நாள் மாவட்ட கல்ந்தாய்வு கன்னியாகுமாரி மேற்கு மாவட்ட செயலாளர் குமரி.மணிமாறன்தலமையில், முன்னாள் மாவட்ட தலைவர் சிதம்பர லிங்கம் அவர்கள் முனிலையில்  நடந்தது கூட்டத்தில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது. தீர்மானம்: முன்னாள் மாவட்ட...

கன்யாகுமாரி மாவட்டம் சார்பாக நமது அண்ணங்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு துண்டறிக்கை இனிப்பு இரணியல் நீதிமன்ற வளாகதில்...

கன்யாகுமாரி  மாவட்டம்  சார்பாக  நமது  அண்ணங்களின்  தூக்கு  தண்டனை ரத்து  செய்யப்பட்டதற்கு  துண்டறிக்கை  இனிப்பு  இரணியல் நீதிமன்ற வளாகதில்  நமது கட்சியின்  சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  குமரி.மணிமாறன், மாவட்ட இளைஞர்பாசறை...

முற்றுகை: நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது

பந்தலூரில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 32 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய மத்திய...

கடலூர் தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்.

ராஜீவ் கொலை வழக்கில் தமிழக அரசால் விடுதலை செய்த  7 நபர்களின் விடுதலையை தடுத்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்த காங்கிரஸ் அரசை கண்டித்து  கடலூர் தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்.

நெய்வேலி நாம்தமிழர் கட்சியின் சார்பாக சோனியாகாந்தியின் உருவ பொம்மை எரிப்பு

1987-ம் ஆண்டு இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படையினரால் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப் பட்டத்துடன், ஆயிரக்கணக்கான தமிழ்ப்பெண்கள் இந்திய இராணுவ வீரர்களால் கற்பழிக்கப்பட்டதிற்கு காரணமாக இருந்த இராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு கொல்லப்பட்டதிற்கு காரணம் என குற்றம் சுமத்தப்பட்டு 23 ஆண்டுங்களாக சிறையில் வாடும் நம் இரத்த சொந்தங்கள்  நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர்களை உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படிவிடுதலை செய்ய தமிழக முதல்வர் 19-02-2014 அன்று தனது அமைச்சரவை மூலம் இட்ட உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கி தொடர்ந்து தமிழர் விரோத போக்கை கடை பிடித்து வரும் சோனியா காந்தி தலைமையில் இருக்கும் மத்திய அரசை கண்டித்து நெய்வேலி நாம்தமிழர் கட்சியின் சார்பாக நெய்வேலி நகரம் வட்டம்-19 ல் அமைந்துள்ள தபால் நிலையம் முன்பு இன்று (22-02-2014) காலை 11.30 மணியளவில் கடலூர் மேற்கு மாவட்டத்தலைவர் முத்து.அசோகன், நெய்வேலிநகரச்செயலாளர் மு.ஜின்னா, தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பெரியார் பேரன், இரவி,  நகர பொறுப்பாளர்கள்  ஜெயசங்கர், முதனைஅறிவழகன், முருகவேல் , பன்னீர் செல்வம், இளைஞர் பாசறை நிர்வாகிகள் மா.அன்பு செல்வன்,மணி, கோபி வெங்கடேசன், மாணவர் பாசறை அறிவுக்கரசு, திவாகரன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் ஒன்று கூடி சோனியாகாந்தியின் உருவ பொம்மையை கொளுத்தினர்.மேலும் காங்கிரசுக்கு எதிராக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவும் கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பாக முடிவிடுக்கப்பட்டுள்ளது.

சேலம் தொடர்வண்டி சந்திப்பில் சோனியா உருவபொம்மை எரிப்பு மற்றும் தொடர்வண்டி மறியல் போராட்டம்

22.02.2014 அன்று சேலம் தொடர்வண்டி சந்திப்பில் சோனியா உருவபொம்மை எரிப்பு மற்றும் தொடர்வண்டி மறியல் போராட்டம் : ராஜிவ்காந்தி கொலைவழக்கில் தூக்கு தண்டனை பெற்று 22 ஆண்டுகளுக்கு மேலாக தனிமைச் சிறைக் கொட்டடியில் வாடிப்...

திருப்பூர் மாநகராட்சி முன் மத்திய அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டம்!

தமிழர் விடுதலைக்கு ஆதரவாக எவர் இருந்தாலும் ஆதரிப்போம் எதிர்ப்பாக யார் இருந்தாலும் எதிர்ப்போம் ! இன்று (22.02.2014) திருப்பூர் மாநகராட்சி முன் மத்திய அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டம்.  

கடலூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் எழுவர் விடுதலைக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

ராஜீவ் கொலை வழக்கில் நேர்மையான விசாரணை இன்றி தூக்கு தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து  உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றதிற்க்கும் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்த...