அரவக்குறிச்சி தொகுதியில் பரப்புரைக்கூட்டம்
கரூர் மாவட்டம் சார்பாக அரவக்குறிச்சி தொகுதியில் 18-11-15, 19-11-15 ஆகிய இருநாட்கள் தெருமுனைப் பரப்புரைக்கூட்டம் நடந்தது. இதில் வேட்பாளர் அரவிந்த், திருப்பூர் மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் சி.மா.கண்ணன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.
பொள்ளாச்சியில் தெருமுனைப்பரப்புரைக் கூட்டம்
கோவை மாவட்டம் சார்பாக நேற்று(19-11-15) பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் திடல், ஜமீன் ஊத்துக்குளி, தங்கம் திரையரங்கம், வடக்கிபாளையம் பிரிவு, புளியம்பட்டி, நெகமம் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில்...
செம்மஞ்சேரியில் மக்களுக்கு உதவி
காஞ்சி மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட செம்மஞ்சேரியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று முந்தையநாள் (18-11-15) உணவு வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட காஞ்சி மாவட்ட மக்களுடன் சீமான் சந்திப்பு
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று (19-11-15) சந்தித்து ஆறுதல் கூறி, உணவுப்பொருட்களை வழங்கினார். இதில் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கல்லுக்குட்டை, செம்மஞ்சேரி, ஏரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களையும்,...
மழையால் பாதிக்கப்பட்ட கோட்டூர்புரம் மக்களைச் சந்தித்தார் சீமான்
நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று (18-11-15) மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம், கோட்டூர்புரம், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஐ.சி.எப். தொழிலாளர்களின் போராட்டத்திற்கு சீமான் ஆதரவு!
ஐ.சி.எப்.இல் பயிற்சி(அப்ரண்டிஸ்) முடித்த தொழிலாளர்கள், நிரந்தர பணி கேட்டு பல நாட்களாக போராடி வருகிறார்கள். மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் போராட்டத்தில் நேற்று (18-11-15) நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
தாம்பரம் மக்களை நேரில் சந்தித்தார் சீமான்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம் பகுதி மக்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார்.
கிணத்துக்கடவு பகுதியில் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் 17-11-15 அன்று கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். நகரில் உணவு வழங்கப்பட்டது
சென்னை, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
விருகம்பாக்கம் பகுதியில் சீமான் பார்வையிட்டார்.
விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார்.


