முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

‘நீர் இன்றி அமையாது உலகு’ என்றார் நம்முடைய வள்ளுவப் பெரும்பாட்டன்….

0

'நீர் இன்றி அமையாது உலகு'
என்றார் நம்முடைய வள்ளுவப் பெரும்பாட்டன். 'நீ இன்றி அமையாது நீர்நிலைகள்'
என்று சொல்லுமளவுக்கு
தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான நீர்நிலைகளை செம்மைப்படுத்தி
பல்லுயிர் வாழவும் பாடுபடும்
அன்புத்தம்பி நிமல் ராகவன் – சுஜிதா
இணையருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்!

‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ என்று தமிழ்மறை கூறும் அறநெறிக்கேற்ப ‘செம்புலப்
பெயல்நீர்’ போல அன்புடை நெஞ்சம் தான் கலந்து, எல்லா வளங்களும் நலன்களும் பெற்று, இல்லறத்தில் நல்லறம் கண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறேன்!

@being_nimal

Exit mobile version