முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அடக்குமுறைகளுக்கும், அதிகார அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் பரந்தூர் புதிய வானூர்தி நிலைய…

0

அடக்குமுறைகளுக்கும், அதிகார அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் பரந்தூர் புதிய வானூர்தி நிலைய போராட்டத்தை தொடர்ந்து முன்னின்று நடத்திய போராளியும், ஏகானாபுரம் கிராம ஊராட்சிமன்றத் தலைவர் சகோதரி சுமதி அவர்களின் கணவருமான மதிப்பிற்குரிய சகோதரர் சரவணன் அவர்கள் திடீர் உல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தான் பிறந்த மண்ணிற்காகவும், மக்களுக்காகவும் அயராது போராடிய சகோதரர் சரவணன் அவர்களின் மறைவு, பரந்தூர் ஏகானாபுரம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.

சகோதரர் சரவணனை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஏகனாபுரம் மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரில. பங்கெடுக்கின்றேன்.

பரந்தூர் வானூர்தி நிலைய எதிர்ப்புப் போராளி பெரு மதிப்பிற்குரிய சகோதரர் சரவணன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version