முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மறைந்த போற்றுதற்குரிய தமிழறிஞர், மெய்யியலாளர், கவிஞர், பேராசிரியர் ஐயா க.நெடுஞ்செழியன்…

0

மறைந்த போற்றுதற்குரிய தமிழறிஞர், மெய்யியலாளர், கவிஞர், பேராசிரியர் ஐயா க.நெடுஞ்செழியன் அவர்களின் இல்லறத்துணை, மதிப்பிற்குரிய அம்மா பேராசிரியர் சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தமிழ் மொழி, பண்பாடு, மெய்யியல் குறித்த ஆய்வுகளுக்காக தம் வாழ்வினை ஒப்புவித்து வாழ்ந்து மறைந்த ஐயா நெடுஞ்செழியன் அவர்களுக்கு உற்றதுணையாக இருந்து, ஐயாவின் தமிழத்தொண்டு சிறக்க உதவிய பெருமாட்டி, அம்மா சக்குபாய் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

தமிழீழத்தாயக விடுதலைக்கு தான் ஈன்ற மகனை ஈகம் புரிந்த மதிப்பிற்குரிய பேராசிரியர் அம்மா சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version