முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலிருந்து, சவுதி அரேபிய நாட்டின் மெக்கா நகருக்கு…

0

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலிருந்து, சவுதி அரேபிய நாட்டின் மெக்கா நகருக்கு புனிதப்பயணம் சென்ற 45 இசுலாமியப் பெருமக்கள், மதினா நகர் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் சிக்கி மரணித்த பெருந்துயர செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

அவர்களில் 9 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 18 இசுலாமியச்சொந்தங்கள் மரணித்துள்ளனர் என்ற துயரச்செய்தி இதயத்தை கனக்கச்செய்கிறது.

இப்பெருந்துயர நிகழ்வில் மறைவெய்திய இசுலாமியப்பெருமக்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

உயிரிழந்த இசுலாமியப் பெருமக்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version