நாம் தமிழர் கட்சி – தி.நகர் சட்டமன்றத் தொகுதி (132வது வட்டம்) மாவட்ட குருதிக்கொடைப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி சுரேஷ் அவர்களுடைய தந்தை கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி சுரேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!




