நாம் தமிழர் கட்சியின் அரக்கோணம் மாவட்ட மகளிர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தங்கை அப்சியா நஸ்ரின் அவர்களின் தாயார் அம்மா தாயிரா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத்தங்கை அப்சியா நஸ்ரின் அவர்களுக்கும், அரக்கோணம் மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி கா.மு.தௌபிக் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா தாயிரா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




