முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மதயானைக் கூட்டம், இராவண கோட்டம் திரைப்படங்களின் இயக்குநர் அன்புத்தம்பி விக்ரம்…

0

மதயானைக் கூட்டம், இராவண கோட்டம் திரைப்படங்களின் இயக்குநர் அன்புத்தம்பி விக்ரம் சுகுமாரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

அப்பா பாலு மகேந்திராவிடம் கலைபாடம் பயின்று வளர்த்தெடுத்த தம்முடைய அளப்பரிய படைப்பாற்றல் மூலம், திரைத்துறையில் மிகப்பெரிய சாதனைகள் புரிய வேண்டும் என்ற பெருங்கனவு கொண்டிருந்த தம்பி விக்ரம் சுகுமாரன், அவை முழுமையாய் நிறைவேறும் முன்பே மறைவெய்தியது ஏற்றுக்கொள்ள முடியாத மனவலியைத் தருகிறது.

ஆடுகளம் படத்திற்கு அவர் எழுதிய அழுத்தமான உரையாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் வல்லமை பெற்றவை. சாதிய சிக்கல்களை களைந்து, சமூக சீர்த்திருத்ததை வலியுறுத்தும், மண் மணம் மாறாத அவரது திரைப்படங்கள் காலத்தால் அழியாத காவியங்களாகும். திரைக்கலையை தாம் வாழ்ந்த மண்ணிற்கும், மக்களுக்கும் அர்ப்பணித்து, அற்புத படைப்புகளை தந்த தம்பி விக்ரம் சுகுமாரனின் திடீர் மறைவால், தமிழ்த்திரையுலகம் தம்முடைய நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒன்றை இழந்து நிற்கிறது.

தம்பி விக்ரம் சுகுமாரனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

தம்பி விக்ரம் சுகுமாரன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version