நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் தொகுதிப் பொருளாளர் அன்புத்தம்பி இரா.ஜெயபிரகாஷ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா இராமு அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா இராமு அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!



