தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர் அன்புத்தம்பி அஜித்குமார் அவர்களுக்கு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகவும் மகிழ்ந்தேன்.
தன் கடும் உழைப்பால், தன் கவிர்ந்திழுக்கும் நடிப்புத்திறனால் வெற்றிப்படங்கள் பல தந்து,
லட்சக்கணக்கான ரசிகர்களின் பேரன்பினையும் பெற்று, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட தம்பி அஜித் அவர்கள், மகிழுந்து பந்தயத்திலும் பெரும் ஈடுபாடு கொண்டு, அண்மையில் அவரது அணி வெற்றிவாகை சூடி வரலாறு படைத்தது பேருவகை அளித்தது.
திரைத்துறையோ, விளையாட்டோ தேர்ந்தெடுத்த துறை எதுவானாலும் தம்முடைய அயராத முயற்சியால் தனிமுத்திரை பதித்து, சாதனை படைக்கும் தம்பி அஜித்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பத்மபூஷன் விருதானது தகுதிவாய்ந்தவருக்கு மிகச்சரியாக வழங்கப்பட்டுள்ள விருதாக கருதுகிறேன்.
அன்புத்தம்பி அஜித்குமார் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!

