அடிமை இந்தியாவின் விடுதலைக்காக 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தப் பெருந்தியாகி; விடுதலைபெற்ற இந்தியாவிலும் மணற்கொள்ளைக்கெதிராகவும், மண்ணின் உரிமைகளுக்காகவும் சமரசமற்று, தளர்வின்றி இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் ஒப்பற்றப் போராளி!
(1/2)
நேர்மையையும், தூய்மையையும், வாய்மையையும் உயிரெனப் போற்றி அதனை அடியொற்றி வாழும் அப்பழுக்கற்றப் பெருந்தலைவர் எங்கள் ஐயா #நல்லக்கண்ணு அவர்களது 98வது அகவை நாள் இன்று (26-12-2022)
ஐயாவுக்கு எனது உளம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் அடைகிறேன். (2/2)


