முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உள்ள முனைவர் சாகிர் உசேன் கல்லூரியில்…

0

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் உள்ள முனைவர் சாகிர் உசேன் கல்லூரியில் எனக்குப் பயிற்றுவித்த வணிகவியல் துறைப் பேராசிரியர் பெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய எங்கள் ஐயா மு.முகம்மது ஜலீல் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

பேராசிரியராகப் பணியாற்றி எண்ணற்ற மாணவர்கள் கல்வி கற்று வாழ்வில் மேம்பட நல்வழிகாட்டிய பெருந்தகை ஐயா மு.முகம்மது ஜலீல் அவர்கள்.

என் மீது பேரன்பும், பெரும் நம்பிக்கையும் கொண்டிருந்த ஐயா அவர்களது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்குப் பேரிழப்பாகும்.

ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், அவரது மாணவர்களுக்கும், அவருடன் பணியாற்றிய ஆசிரியப் பெருமக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா மு.முகம்மது ஜலீல் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version