நாம் தமிழர் கட்சி – வேலூர் கிழக்கு மாவட்டப் பொருளாளர் அன்புத்தம்பி திருக்குமரன் அவர்களின் தந்தை சம்பத் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி திருக்குமரன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் கட்சி சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சம்பத் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!


