முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் கிழக்கு…

0

நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி மு.சுமித் அவர்களின் பெரியப்பாவும், ஒன்றியப் பொறுப்பாளர் ஜெ.சரண்ராஜ் அவர்களின் தாய் மாமாவுமாகிய மதிப்பிற்குரிய ஐயா நடுவக்களப்பால் த.மாரிமுத்து அவர்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். நாளுக்கு நாள் பெருகி வரும் வன்முறைகளும், படுகொலைகளும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்குச் சீர்கேட்டினை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஐயா மாரிமுத்து அவர்களது படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்து, அவர்களுக்கு தக்க தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

ஐயா மாரிமுத்துவை இழந்து வாடும் தம்பிகள் மு.சுமித், ஜெ.சரண்ராஜ் ஆகியோருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா த.மாரிமுத்து அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version