இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பசிர் அகமது அவர்களின் தாத்தா ஓடைக்குளம் முனியன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
குடும்பத்தின் ஆணிவேராக இருந்த தாத்தாவை இழந்து வாடும் அன்புத்தம்பி பசிர் அகமது அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
பெருமதிப்பிற்குரிய தாத்தா ஓடைக்குளம் முனியன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!




