முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – வேலூர் மாவட்டம், கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிக்குட்பட்ட…

0

நாம் தமிழர் கட்சி – வேலூர் மாவட்டம், கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிக்குட்பட்ட கீழ் ஆலத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த களப்பணியாளர் அன்புத்தம்பி ஐயப்பன் அவர்களின் மூத்தமகன் திவேஷ் அவர்கள் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடைபெற்றுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டியில் பங்கேற்க சென்னையில் இருந்து தொடரியில் பயணிக்கும்போது தவறி விழுந்த விபத்தில் உயிரிழந்தார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

அன்புமகன் திவேஷ் அவர்கள் இந்திய ஒன்றிய அளவிலான சதுரங்க விளையாட்டில் பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர். மகனின் தனித்திறனைக் கண்டறிந்து, அதனை ஊக்குவித்து, தன்னம்பிக்கையூட்டி அவனது கனவை நிறைவேற்ற அயராது பாடுபட்டுவந்த அன்புத்தம்பி கீழ்ஆலத்தூர் ஐயப்பன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இப்பேரிழப்பு மிகுந்த வேதனையைத் தருகிறது.

போற்றி வளர்த்த பாசமகனை இழந்து வாடும் தம்பி ஐயப்பன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புமகன் திவேஷ் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

Exit mobile version