தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா துரைராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, தமிழின விடுதலைக் கனவை நனவாக்கிட தனது இறுதி மூச்சுவரை அயராது களப்பணியாற்றி, இளம் தலைமுறைப் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த ஐயா துரைராஜ் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனவேதனையைத் தருகிறது.
ஐயாவை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா துரைராஜ் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி



