முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தம் இனிய குரலால் பல்லாயிரம் பாடல்கள் பாடி கோடிக்கணக்கான இதயங்களை…

0

தம் இனிய குரலால்
பல்லாயிரம் பாடல்கள் பாடி கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்ட பின்னணி பாடகி, இசையரசி அம்மா ஜானகி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

இசையமைக்கும் வல்லமையும் பெற்ற அம்மா ஜானகி அவர்கள்,
ஏறத்தாழ 17 மொழிகளில் பல்லாயிரம்
பாடல்கள் பாடி, சிறந்த பாடகிக்கான இந்திய அரசின் விருதை 4 முறையும், நந்தி விருதினை 10 முறையும், பல்வேறு மாநில அரசுகளின் விருதை 33 முறையும் பெற்ற பெருமைக்குரியவராவார்.
தாமதமாக தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணித்த அம்மா ஜானகி அவர்களின் போர்க்குணம் போற்றத்தக்கது.

காற்றில் மிதந்து காதுகளில் நிறைந்து
காலத்தை வென்ற இசையரசியின் மறைவு, ஈடு செய்யவியலாத பேரிழப்பாகும்.

அம்மா ஜானகி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், அவருடைய இசை ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.

இனிய குரலால் இதயங்களை வென்ற இசையரசி அம்மா ஜானகி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version