முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, மாணவர்…

3

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி, மாணவர் பாசறையின் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி அ.செர்லிமான் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் புரட்சிகர அரசியல் பெரும்படையான நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி அ.செர்லிமான் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.

ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி அ.செர்லிமான் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version