முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்செயலாளர் மருத்துவர் திருமால்செல்வன் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம்

3

க.எண்: 20260700224
நாள்: 16.07.2026

 

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்செயலாளர் மருத்துவர் திருமால்செல்வன் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில்
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற ஆடி 03ஆம் நாள் 19-07-2026 காலை 10 மணியளவில் சேலம், நான்கு சாலை அருகில், காந்தி விளையாட்டு மைதானம் எதிரில் உள்ள காருண்யா அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.
இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version