முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் கலந்தாய்வு

1

க.எண்: 2026110289
நாள்: 20.11.2026

ஒருங்கிணைந்த மதுரை மண்டலக் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் மாபெரும் குருதிக்கொடை முகாம்
தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 72ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் பாளையங்கோட்டை எல்.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கும் தமிழர் எழுச்சி நாள் விழா மற்றும் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கும் மாவீரர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்பது தொடர்பாக எதிர்வரும் கார்த்திகை 6ஆம் நாள் 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் மதுரை – தேனி முதன்மைச் சாலையில் பி.பி.சாவடி மாஸ்டர் மகால் பின்புறம் உள்ள ஆழ்வார் திருமண மண்டபத்தில் மதுரை பொறுப்பாளர்கள் சிவானந்தம், சோமசுந்தரம், திருநாவுக்கரசு, இனியவன் ஹக்கீம் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் ஒருங்கிணைந்த மதுரை மண்டலக் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெறவிருக்கிறது.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த மதுரை மண்டலத்தைச் சேர்ந்த கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version