முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தமிழர் எழுச்சி நாள் விழா

0

க.எண்: 2026110282
நாள்: 10.11.2026

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 72ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, வருகின்ற கார்த்திகை 10ஆம் நாள் 26-11-2026 வியாழக்கிழமை அன்று காலை 10 மணியளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள எல். எஸ். திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தமிழர் எழுச்சி நாள் விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கின்றது. தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! தமிழர் எழுச்சி நாள் விழா விழாப் பேருரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்: கார்த்திகை 10 | 26-11-2026 காலை 10 மணியளவில்
இடம்:
எல்.எஸ். திருமண மண்டபம்
100 அடி சாலை, ரகமத் நகர், வருவாய் துறை அலுவலகம் அருகில். பாளையங்கோட்டை
திருநெல்வேலி மாவட்டம்
இம்மாபெரும் தமிழர் எழுச்சி நாள் விழாவில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப்
பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version